அடிப்படையான உயிர் காக்கும் முதல் உதவி

 

                                           


 விபத்து, காயம், உடல்நலக்குறைவு, போன்ற பல்வேறு காரணங்களால் பாதிப்புக்கு உள்ளானவர்களை மறுத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்கு முன்னர் உடல்நிலையில் பின்னடைவோ உயிரிழப்போ ஏற்படலாம். சில நேரங்களில் பாதிப்பின் தீவிரம் அதிகமாகலாம். அது போன்ற நேரங்களில் உடல்நலத்தில் ஏற்படும் பின்னடைவைத் தள்ளிபோடவோ, தடுக்கவோ, பின்பற்றப்படும் மருத்துவ உதவிதான் முதலுதவி, தக்க தருணத்தில் செய்யபடும் முதலுதவி உயிரைக்  காப்பாற்றும். பலநேரங்களில் தீவிர பாதிப்புகள் ஏற்படாமலும் ரத்த இழப்பு அதிகரிக்காமலும் தடுக்கும். 

ABC

                                    உயிரைக் காப்பாற்றும் முதலுதவியில் 'ABC' என்ற கருதாக்கம் பின்பற்றபடுகிறது. மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் மத்தியில் பயன்படுத்தபடும் கருதாக்கம் என்றாலும் பொதுமக்களும் இதை பின்பற்றலாம்

                            A- AIRWAY

                            B- BREATHING

                            C- CIRCULATION

AIRWAY

                          மயக்கமோ, மூச்சுத்தினறலோ ஏற்பட்டால் சம்பந்தப் பட்டவர்களைச் சுற்றி கூட்டம் போடாமல் காற்றோட்டதை ஏற்படுத்துவது; வீடாக இருந்தால் ஜன்னல்களை திறந்து காற்று வருவதற்கு வழிசெய்வது 'ஏர்வே'. 

BREATHING

                        விபத்தில் அடிப்பட்டு, முகம் தரையில்படும் நிலையில் மயகத்திலிருபவர்கள், வாந்தி எடுத்த நிலையில் குப்புற விழுந்து மயங்கியநிலையில் இருப்பவர்களுக்கு மூச்சுக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு சுவாசிப்பதில் பிரச்சனை ஏற்படும். அவர்களை ஒருக்களித்துப் படுக்கவைத்தால் மூச்சுக்குழாயில் ஏற்பட்டிருக்கும் அடைப்பு நீங்கி இயல்பாக சுவாசிப்பார்கள். ஆஸ்துமா நோயாளிகள், இதய நோயாளிகளுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு கீழே விழும்போது அவர்கள் தலையைச் சற்று உயர்த்திப் பிடித்தால் இயல்பாக சுவாசிப்பார்கள். 

CIRCULATION

                      காயம்பட்ட இடத்தில் ஏற்படும் இரத்தக்கசிவை நிறுத்துவது, விபத்துக்குள்ளாகிக் காயம்படும் போதோ, விளையாடும்போது தலை மற்றும் தாடைப் பகுதியில் அடிப்படும்போதோ, அல்லது கத்தி அறிவாள்மனை கீறும்போதோ, காயம் ஏற்பட்டு இரத்தப்போக்கு அதிகமாக ஏற்படும். முகம் மற்றும் கைகளில் இயல்பாகவே இரத்த  ஓட்டம் அதிகமாக காணபடுவதால், காயம்படும் போது அதிக அளவில் இரத்தபோக்கும் ஏற்படும். அப்போது இரத்தபோக்கு ஏற்பட்ட இடத்தில் சுத்தமான துணியை வைத்து மிதமாக அழுத்தி பிடிக்க வேண்டும். அடிப்பட்ட இடத்தைச் சற்று உயர்த்திய நிலையில் வைக்க வேண்டும்.  இதனால் இதனால் இரத்தபோக்கு விரைவில் நிற்க வாய்ப்புள்ளது. 


                                        இவை மூன்றும் அடிப்படை முதலுதவி செய்வதும் மற்றும் சுற்றுசூழலை ஏற்படித்துவதும் ஆகும். இதை தவிர்த்து மேலும் நுட்பமாக செய்யும் முதழுதவிகளும் உள்ளன.      



                                         

Comments

Post a Comment