ஒருவர் எத்தனை மணி நேரத்திற்கு ஒரு முறை மலம் கழிக்க வேண்டும் என்ற கேள்விக்கு உண்மையான பதில், உங்களுக்கு அதற்கான உந்துதல் ஏற்படும் போதெல்லாம் மலம் கழிக்க வேண்டும் என்பதுதான்.
மலம் கழிக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்படும் போது அதனை செய்யாமல் அடக்குவது, குடல் புற்றுநோய், செரிமான மண்டலத்தில் சிறிய மற்றும் பெரிதளவிலான புடைப்புகள் ஏற்படுவது, மூல நோய், ஆசனவாயிலிருந்து நீர் வெளியேறுவது போன்ற பல உடல்நல பாதிப்புகள் ஏற்படும்.
மலம் கழிக்க வேண்டும் என்ற உந்துதலை தூண்டுதல்
உணவு உண்பது மலம் கழிக்கும் எண்ணத்தைத் தூண்டுவதாக, 20ம் நூற்றாண்டின் முற்பகுதியில் உடலியல் நிபுனர்கள் கண்டறிந்தனர். குறிப்பாக காலை உணவுக்கு பிறகு அந்த தூண்டுதல் அதிகரிக்கிறது.
மலம் கழிப்பதை சிறிது நேரம் அடக்கும் போது அந்த உந்துதல் தற்காலிகமாக நீங்கி விடும். ஆனால் நீண்ட நேரம் மலத்தை அடக்குவது பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதாவது
- மலச்சிக்கல்.
- வயிற்று வலி.
- வயிறு உப்புவது
- வாயுத்தொல்லை
- மெதுவாக மலம் வெளியேறுதல்
ஆகிய பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
மலம் வெளியேறும் நேரத்தை கண்டறிதல்.
உணவு உண்டபின் அது மலமாக வெளியேறுவதற்கு நீண்ட நேரம் எடுத்துக்கொள்வது வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கலுடன் தொடர்புடையது.
இந்த நேரத்தை கணக்கிட மிக எளிய வழி உள்ளது. கையளவு சமைக்காத இனிப்பு சோளத்தை விழுங்கி விட்டு, பின்னர் மலத்தில் சோளக்கரு தெரிகிறதா என்று கவனியுங்கள். இனிப்பு சோளத்தை விழுங்கிய 8 முதல் 24 மணி நேரத்துக்குள் இது நிகழ வேண்டும்.
நீண்ட நேரம் கழித்து மலத்தை வெளியேற்றினால் என்ன நிகழும்?
வயிற்றுக்குள் மலத்தை அடக்குவது என்பது நீங்கள் உண்ணும் உணவின் எச்சம், உங்கள் உடலில் தேவையானதை விட நீண்ட நேரம் தங்கி இருக்கும் சூழலை ஏற்படுத்துகிறது. இதனால் உடல் நல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
நீர், பாக்டீரியா, நைட்ரோஜென் பொருட்கள், கார்போஹைட்ரேட், செரிக்கப்படாத தாவர்பொருட்கள், மற்றும் கொழுப்புகள் அடங்கிய சுமார் ஆறு டன் மலத்தை நம் வாழ்நாளில் உற்பத்தி செய்கிறோம்.
இந்த கலவை நீண்ட நேரம் நம் உடலில் தங்கினால் உள்ளுக்குள் நொதித்தல் நிகழ்கிறது. இது வாயுவை மற்றும் ஏற்படுத்தாமல், வளர்சிதை மாற்ற ரசயணங்களையும் உருவாக்குகிறது.
உணவு உண்டபின் நீண்ட நேரத்திற்கு பின் மலம் கழிப்பது,
- பெருங்குடல் புற்றுநோய்
- பெருங்குடல் கட்டிகள்
- செரிமான மண்டலத்தில் புடைப்புகள்
- பித்தப்பை கற்கள்
- மூலநோய்
உள்ளிட்ட ஏற்பட வலி வகுக்கிறது
உணவு உண்டபின் குறைவான நேரத்தில் மலம் கழிப்பதும் குடல் சார்ந்த பல்வேறு கேடுகளுக்கு வழிவகுக்கிறது.
என்ன செய்ய வேண்டும்.
குடல் சார்ந்த இத்தகைய உடல்நலக் கேடுகளுக்கு நார்சத்து மற்றும் திரவ உணவுகளை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் மேலும் தினந்தோறும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
இவற்றையெல்லாம் விட மேலானது, மலம் கழிக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்படும்போது அதனை செய்துவிடுவதே.
Comments
Post a Comment